மாவட்ட அறிவியல் மையம் - திருநெல்வேலி

நம் நெல்லையின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருப்பது அறிவியல் மையம்(science centre ) தான். பொழுதுபோக்கு மட்டும் இல்லை , அறிவை வளர்த்து கொள்ளும் பல விஷயங்களும் இங்கு உண்டு . குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டுகள் , அறிவியல் நிகழ்வுகள் , டைனோசர் பார்க், மின்னணுவியல் பற்றிய பிரிவு, இயற்பியல் பிரிவு என பல சுவாரஸ்யமானவற்றை காணலாம். அறிவியல் மையத்தின் முகப்பு பகுதி தற்போது நுழைவு கட்டணம் (2018 வருடம் ) நபருக்கு 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. உள்ளே நுழைந்த உடன் ஒரு இயற்கை சூழ்ந்த அமைப்பை நீங்கள் உணரலாம் . உள்ளே சிறுவர்களுக்கான ஊஞ்சல் , மற்றும் அதை சார்ந்த விளையாட்டுகள் இருக்கும். சிறுவர்கள் மட்டும் இன்றி அனைவரும் விளையாட கூடிய பல இயற்பியல் சார்ந்த நுணுக்கங்கள் நம் கண் முன்னே இருக்கும். அதையும் தாண்டி செல்ல அங்கு டைனோசர் பார்க் உள்ளது. அங்கு அனைத்து வகையான டைனோசர் வகைகளும், அசையும் வடிவில் உறுமல் சத்தத்துடன...