குற்றாலம் பகுதி 2
ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவக்காற்று ஆரம்பித்தவுடன் குற்றாலத்தில் தண்ணீர் விழ தொடங்கி விடும். சில சமயம் பருவ நிலை மாற்றம் காரணமாக மே மாதத்தில் கூட சீசன் தொடங்கி விடும் . ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்கள் குற்றால சீசன் காலம் ஆகும் .
இங்கு தங்கும் விடுதிகள் உள்ளதால் நிறைய சுற்றுலா பயணிகள் தங்கி இருந்து குளித்து விட்டு செல்கின்றனர். நன் ஏற்கனவே கூறியது போல் இங்கு
* பேரருவி
* பழைய குற்றால அருவி
* தேனருவி
* புலியருவி
* செண்பகாதேவி அருவி
* சிற்றருவி
* பழந்தோட்ட அருவி
* ஐந்தருவி
என பல அருவிகள் உண்டு .
ஒவ்வொரு அருவி குளியலும் ஒவ்வொரு சுகமே . பேரருவியில் விழும் தண்ணீர் கல் போலவும் , பழைய குற்றால அருவி தண்ணீர் பூ மழை போலவும், விழுவதே ஒரு அதிசயம் தான் . ஐந்தருவி யில் தண்ணீர் 5 கிளைகளாக பிரிந்து விழும். பெண்களுக்கு 2 கிளைகளும், ஆண்களுக்கு 3 கிளைகளும் ஒதுக்கப்பட்டிருக்கும் . சிறுவர்களுக்கு ஏற்ற அருவி என்றால் அது புலியாருவி தான் . குறைவான உயரத்தில் இருந்து இதமான தண்ணீர் விழும்.
செண்பகாதேவி அருவி ,சிற்றருவி போன்றவை மலைமேல் உயரத்தில் அமைந்துள்ளது. அருகில் செண்பகா தேவி அம்மன் கோவில் உள்ளது . இந்த இடம் கரடு முரடான பாதை அமைப்பை கொண்டிருப்பதால் இங்கு செல்ல அனுமதி இல்லை . தேனருவியும் இது போன்ற மத்தியில் அமைந்துள்ளது . அங்கு தேன் கூடுகள் அதிகம் காணப்படுவதால் இந்த அருவிக்கு தேனருவி என பெயர் வந்தது. பழந்தோட்ட அருவி அனைத்து அரசாங்க கட்டுப்பாட்டு எல்லைக்குள் அமைந்துள்ளது . இங்கு VIP கள் மட்டுமே அனுமதிக்க படுவர். எனவே இது VIP பால்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது .
பேரருவியின் அருகிலேயே குற்றால நாதர் ஸ்வாமி ஆலயம் அமைந்துள்ளது . அதனை சுற்றி பல கடை வீதிகள் , சல சல வென தண்ணீர் சத்தம்,சேட்டைக்கு பெயர் போன குற்றால குரங்குகள் ,இதமான காற்று , குளிரெடுக்கும் வரை குளியல், குளித்தவுடன் சூடான மிளகாய் பஜ்ஜி , காலை வேளையில் கிடைக்கும் சுத்தமான பதநீர் என குற்றால அனுபவமே ஒரு ஆனந்தம் தான்.
நீங்களும் ஒரு குற்றாலம் trip போடலாமே !

Comments
Post a Comment