திருநெல்வேலி பெயர் காரணம்
வேத சர்மா என்ற சைவ அந்தணன் இறைவனுக்கு அமுது படைக்க நெல்லை உலர்த்திவிட்டு தாமிரபரணி நதியில் நீராட சென்றார்.அப்போது கரு மேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை கொட்டியது. மழையில் நெல் நனைந்து விடுமே என்று அந்தணன் ஓடோடி வந்துள்ளார். அனால் மழையில்ஒரு நெல் குட நனையாமல் கண்களுக்கு புலனாகாத ஒரு வேலியிட்டு மழை பெய்ததாம். இந்த அற்புதத்தை கண்ட அந்தணர் நெல்லுக்கு வேலியிட்டு காத்த நெல்லையப்பர் என போற்றி பாடினார்.திரு என்ற அடைமொழியுடன் இவ்வூருக்கு திருநெல்வேலி என பெயர் வந்ததாம்.
Comments
Post a Comment