குற்றாலம்

மூலிகைகள் நிறைந்த அருவிகள்


தென்காசியில் இருந்து 5 km தொலைவில் உள்ளது நம் குற்றாலம். அழகிய அருவிகளின் அரசி நம் குற்றாலம். இங்கு பல அருவிகள் உள்ளன . திரும்பும் இடமெங்கும் கொட்டும் அருவி சத்தம் காதை இனிமையாக்கும் . பழைய குற்றால அருவி , மெயின் அருவி, ஐந்தருவி , புலியருவி , சிற்றறுவி , செண்பகாதேவி அருவி , தேனருவி , பழந்தோட்ட அருவி என பல அருவிகள் இங்கு இயற்கையுடன் கொஞ்சி விளையாடும் அழகோ அழகு.....

மலை மேல் உள்ள மூலிகை செடிகளை கடந்து வருவதால், இது மூலிகை நிறைந்த அருவியாகக் கொட்டுகிறது. எனவே இதில் குளித்தால் நோய் நொடி இன்றி வாழலாம் . ஆகையால் இது தென்னகத்தின் மூலிகை நிறைந்த அருவி (south indian spa) என அழைக்கப்பெறுகிறது.  


தென்காசியை தாண்டும்போதே தென்றல் காற்று நம்மை வரவேற்கும். குற்றாலம் வந்தவுடன் இனிமையான குளிர் காற்றும் , பசுமையான மரங்களும் நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும். தூரத்தில் அருவிகளின் சத்தம் , ஆங்காங்கே மக்கள் கூட்டம், குரங்குகளின் சேட்டைகள் என குதூகல பயணமாக குற்றாலம் அமையும். 

ஒவ்வொரு அருவி பற்றிய பதிவுகளுடன் மேலும் குற்றாலம் பற்றிய தகவல்களை அடுத்த பதிவில் பதிவிடுகிறேன். தொடர்ந்தது இணைந்திடுங்கள்....

Comments

Popular posts from this blog

திருநெல்வேலி பெயர் காரணம்

மாவட்ட அறிவியல் மையம் - திருநெல்வேலி

ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அகஸ்தியர் அருவி