திருநெல்வேலி அல்வா

திருநெல்வேலி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது அல்வாதான்...
முதன்முதலில் இந்த அல்வா ராஜஸ்தான் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த இனிப்புக்கு ராஜ்புத்ராஸ் என அந்த மக்கள் பெயரிட்டு இருந்தனர். சொக்கம்பட்டி ஜமீந்தார் ஒரு வடஇந்திய பயணத்தின் போது இந்த இனிப்பை உண்டு இதன் சுவையில் மயங்கி, இதை செய்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்தார் .

அவர் மூலம் நெல்லையில் முதன்முதலில் இந்த இனிப்பு செய்யப்பட்டு அதற்கு அல்வா என பெயரிடப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் தெரு தெருவாக விற்கப்பட்டுவந்த அல்வா , 1882ம் ஆண்டு ஜெகன்சிங் என்பவரால் கடை தொடங்க பட்டு பின் சலிவா என்பவரால் இந்த கடை இருட்டுக்கடை அல்வா என வளர்ச்சி பெற்றது.... தாமிரபரணி தண்ணீரில் செய்யும் நம் அல்வா ருசி மிகுந்து இருப்பதால் உலக அளவில் பெயர் பெற்றுவிட்டது , வெளிநாடுகளுக்கு அல்வா ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ச்சி பெற்றாலும் இன்றும் இந்த கடையில் ஒரே ஒரு குண்டு pulb மட்டுமே எரியும் .

கடைக்கு பெயர் பலகை கூட கிடையாது ஆனால் உலக அளவில் famous. அதனாலயே இதை இருட்டுக்கடை என்று அழைக்கிறோம். இந்த அல்வா செய்வதற்கு 3 மணி நேரங்கள் ஆகின்றது ... அனால் சில மணி நேரங்களில் விற்றுவிடும் . 5  மணிக்கு திறக்கும் கடைக்கு 3 மணியில் இருந்தே மக்கள் வரிசை காத்திருக்கும்.....

Comments

Popular posts from this blog

திருநெல்வேலி பெயர் காரணம்

மாவட்ட அறிவியல் மையம் - திருநெல்வேலி

ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அகஸ்தியர் அருவி