Posts

Showing posts from April, 2018

குற்றாலம்

Image
மூலிகைகள் நிறைந்த அருவிகள் தென்காசியில் இருந்து 5 km தொலைவில் உள்ளது நம் குற்றாலம். அழகிய அருவிகளின் அரசி நம் குற்றாலம். இங்கு பல அருவிகள் உள்ளன . திரும்பும் இடமெங்கும் கொட்டும் அருவி சத்தம் காதை இனிமையாக்கும் .  பழைய குற்றால அருவி , மெயின் அருவி, ஐந்தருவி , புலியருவி , சிற்றறுவி , செண்பகாதேவி அருவி , தேனருவி , பழந்தோட்ட அருவி என பல அருவிகள் இங்கு இயற்கையுடன் கொஞ்சி விளையாடும் அழகோ அழகு..... மலை மேல் உள்ள மூலிகை செடிகளை கடந்து வருவதால், இது மூலிகை நிறைந்த அருவியாகக் கொட்டுகிறது. எனவே இதில் குளித்தால் நோய் நொடி இன்றி வாழலாம் . ஆகையால் இது தென்னகத்தின் மூலிகை நிறைந்த அருவி (south indian spa) என அழைக்கப்பெறுகிறது.   தென்காசியை தாண்டும்போதே தென்றல் காற்று நம்மை வரவேற்கும். குற்றாலம் வந்தவுடன் இனிமையான குளிர் காற்றும் , பசுமையான மரங்களும் நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும். தூரத்தில் அருவிகளின் சத்தம் , ஆங்காங்கே மக்கள் கூட்டம், குரங்குகளின் சேட்டைகள் என குதூகல பயணமாக குற்றாலம் அமையும்.  ஒவ்வொரு அருவி பற்றிய பதிவுகளுடன் மேலும் குற்றாலம் பற்றிய தகவல்களை அடுத்...

திருநெல்வேலி அல்வா

Image
திருநெல்வேலி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது அல்வாதான்... முதன்முதலில் இந்த அல்வா ராஜஸ்தான் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த இனிப்புக்கு ராஜ்புத்ராஸ் என அந்த மக்கள் பெயரிட்டு இருந்தனர். சொக்கம்பட்டி ஜமீந்தார் ஒரு வடஇந்திய பயணத்தின் போது இந்த இனிப்பை உண்டு இதன் சுவையில் மயங்கி, இதை செய்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்தார் . அவர் மூலம் நெல்லையில் முதன்முதலில் இந்த இனிப்பு செய்யப்பட்டு அதற்கு அல்வா என பெயரிடப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் தெரு தெருவாக விற்கப்பட்டுவந்த அல்வா , 1882ம் ஆண்டு ஜெகன்சிங் என்பவரால் கடை தொடங்க பட்டு பின் சலிவா என்பவரால் இந்த கடை இருட்டுக்கடை அல்வா என வளர்ச்சி பெற்றது.... தாமிரபரணி தண்ணீரில் செய்யும் நம் அல்வா ருசி மிகுந்து இருப்பதால் உலக அளவில் பெயர் பெற்றுவிட்டது , வெளிநாடுகளுக்கு அல்வா ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ச்சி பெற்றாலும் இன்றும் இந்த கடையில் ஒரே ஒரு குண்டு pulb மட்டுமே எரியும் . கடைக்கு பெயர் பலகை கூட கிடையாது ஆனால் உலக அளவில் famous. அதனாலயே இதை இருட்டுக்கடை என்று அழைக்கிறோம். இந்த அல்வா செய்வதற்கு 3 மணி நேரங்கள் ஆகின்றது ... அனால் சில மண...

திருநெல்வேலி பெயர் காரணம்

Image
வேத சர்மா என்ற சைவ அந்தணன் இறைவனுக்கு அமுது படைக்க நெல்லை உலர்த்திவிட்டு தாமிரபரணி நதியில் நீராட சென்றார்.அப்போது கரு மேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை கொட்டியது. மழையில் நெல் நனைந்து விடுமே என்று அந்தணன் ஓடோடி வந்துள்ளார். அனால் மழையில்ஒரு நெல் குட நனையாமல் கண்களுக்கு புலனாகாத ஒரு வேலியிட்டு மழை பெய்ததாம். இந்த அற்புதத்தை கண்ட அந்தணர் நெல்லுக்கு வேலியிட்டு காத்த நெல்லையப்பர் என போற்றி பாடினார்.திரு என்ற அடைமொழியுடன் இவ்வூருக்கு திருநெல்வேலி என பெயர் வந்ததாம்.

திருநெல்வேலி

2000 ஆண்டு பழமை வாய்ந்த நகரம் நம் திருநெல்வேலி.  பொருநை (தாமிரபரணி) நதிக்கரையில் அமைந்துள்ள ஓர் அழகிய சொர்க்கம் நம் நெல்லை சீமை....  நம் திருநெல்வேலியின் மற்றொரு பெயர் வேணுவனம் ஆகும். வேணுவனம் என்பது மூங்கில்காடு ஆகும் . 16ம் நூற்றாண்டில் மூங்கில்காடு நிறைந்த பகுதியாக இது இருந்ததால் இந்த்த பெயர் பெற்றது.