Posts

ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அகஸ்தியர் அருவி

Image
அகஸ்தியர் அருவி திருநெல்வேலியில் இருந்து 53 கிலோமீட்டர் தொலைவிலும், அம்பாசமுத்திரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், பாபநாசம் சிவபெருமான் கோயிலுக்கு மிக அருகில், 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த அருவியின் உயரம் 100 மீட்டர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பல அருவிகள் உள்ளன. களக்காடு பகுதிகளில் உள்ள அருவிகளில் மழை காலத்தில் மட்டும் தண்ணீர் விழும். குற்றாலத்திலுள்ள அருவிகளில் சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். ஆனால் பாபநாசம் மலைப்பகுதிகளிலுள்ள பாணதீர்த்த அருவி, அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். பாபநாசர் கோயிலில் இருந்து இந்த அருவியை நடந்தே வந்தடையலாம் அல்லது ஆட்டோ போன்ற வாகனங்களிலும் செல்லலாம்  . இந்த அருவியில் நீராடுவது நம் பாவத்தை கழுவுவதற்கு மட்டுமின்றி பல மூலிகைச் செடிகளை கடந்து வருவதால் நோய்களை குணப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது. இந்த அருவியின் வழியாக மலை மேல் நடந்து சென்றால், இதன் தொடக்க நிலையை அடையலாம். கல்யாண தீர்த்தம் என்றழைக்கப்படும் அந்த இடம், ...

சுலோச்சன முதலியார் பாலம் - வரலாறு

Image
1836-ஆம் ஆண்டு நெல்லை கலெக்டர் ஆர்.ஈடன் எழுதியிருந்த குறிப்பிலிருந்து திருநெல்வேலி-பளையங்கோட்டை இரட்டை நகரங்கள். இரண்டிற்கும் இடையில் 800 அடி அகலம் உள்ள தாமிரபரணி ஆறு. ஏப்ரல்-மே மாதங்கள் தவிர, ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டோடும்.ஆற்றைக் கடந்திடப் படகில்தான் பயணித்திடல் வேண்டும். படகிற்காகப் பலமணி நேரம் காத்திருத்தல் வேண்டும். குழுவாகச் செல்வோர் எல்லோரும் ஒன்றாக ஒரே நேரத்தில் சென்றுவிட முடியாது. படகில் இடம் பிடித்திட, முதலில் பயணிக்க லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் வாடிக்கையாகிவிட்ட சமாச்சாரங்கள். சமூகவிரோதிகளின் திருவிளையாடல்களுக்குப் பஞ்சமிருக்காது. களவும்,கலகமும், குழப்பமும் பழகிவிட்ட நடைமுறை. 1840-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 10-ஆம் நாள் இரவு: E.P.தாம்சன் ஜில்லா கலெக்டராகப் பொறுப்பேற்று 5 நாட்கள் ஆன நிலை. தாமிரபரணிப் படகுத் துறையில் குழப்பம்; கலகம்; நாலைந்து கொலைகள்; எனவே, கலெக்டர் தூங்காமல் தவித்துக்கொண்டிருந்தார். நெல்லை-பாளை நகரங்களுக்கிடையே பாலம் ஒன்றிருந்தால்......சிந்தித்துக் கொண்டெ உறங்கியும் போனார். ஆலோசனைக் கூட்டமும், அரை லட்ச மதிப்பீட்டில் பாலங் கட்டத் தீர்மானமும்:- ...

அருள்மிகு சொரிமுத்து ஐய்யனார் திருக்கோயில்

Image
சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் காரையாரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் ஐயப்பனுக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என ஆறுபடை வீடு உள்ளது. சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக அமைந்த கோயிலாக இந்த சாஸ்தா கோயில் கருதப்படுகிறது. இங்குள்ள சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி, சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார். இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் நந்தி, யானை, குதிரை வாகனங்கள் இருப்பதும், இவரது சன்னதியிலேயே சப்தகன்னியர்கள் இருப்பதும், முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் இருப்பதும் விசேஷமான அம்சம். குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள்.மகாலிங்கம், சொரிமுத்தைய்யனார், சங்கிலி பூதத்தார், பிரம்மரட்சஸி, தளவாய்மாடன், தூசிமாடன், பட்டவராயர், அகத்தியர், பேச்சியம்மன், சுடலைமாடன், இருளப்பன், இருளம்மன், கரடிமாடசாமி, மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர். சிறப்பம்சம்: பந்த...

மாவட்ட அறிவியல் மையம் - திருநெல்வேலி

Image
     நம் நெல்லையின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருப்பது அறிவியல் மையம்(science centre ) தான். பொழுதுபோக்கு மட்டும் இல்லை , அறிவை வளர்த்து கொள்ளும் பல விஷயங்களும் இங்கு உண்டு . குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டுகள் , அறிவியல் நிகழ்வுகள் , டைனோசர் பார்க், மின்னணுவியல் பற்றிய பிரிவு, இயற்பியல் பிரிவு என பல சுவாரஸ்யமானவற்றை காணலாம்.         அறிவியல் மையத்தின் முகப்பு பகுதி              தற்போது நுழைவு கட்டணம் (2018 வருடம் ) நபருக்கு  15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. உள்ளே நுழைந்த உடன் ஒரு இயற்கை சூழ்ந்த அமைப்பை நீங்கள் உணரலாம் .  உள்ளே சிறுவர்களுக்கான ஊஞ்சல் , மற்றும் அதை சார்ந்த விளையாட்டுகள் இருக்கும். சிறுவர்கள் மட்டும் இன்றி அனைவரும் விளையாட கூடிய பல இயற்பியல் சார்ந்த நுணுக்கங்கள் நம் கண் முன்னே இருக்கும்.  அதையும் தாண்டி செல்ல அங்கு டைனோசர் பார்க் உள்ளது.                 அங்கு அனைத்து   வகையான டைனோசர் வகைகளும், அசையும் வடிவில் உறுமல் சத்தத்துடன...

குற்றாலம் பகுதி 2

Image
                                ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவக்காற்று ஆரம்பித்தவுடன்  குற்றாலத்தில் தண்ணீர் விழ  தொடங்கி விடும். சில சமயம் பருவ  நிலை மாற்றம் காரணமாக மே மாதத்தில் கூட சீசன் தொடங்கி விடும் . ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்  மாதங்கள் குற்றால சீசன் காலம் ஆகும் . இங்கு தங்கும் விடுதிகள் உள்ளதால் நிறைய சுற்றுலா பயணிகள் தங்கி இருந்து குளித்து விட்டு  செல்கின்றனர். நன் ஏற்கனவே கூறியது போல் இங்கு      *  பேரருவி    *  பழைய குற்றால அருவி     *  தேனருவி     *  புலியருவி     *  செண்பகாதேவி அருவி     *  சிற்றருவி     *  பழந்தோட்ட அருவி     *  ஐந்தருவி             என பல அருவிகள் உண்டு .                       ஒவ்வொரு அ...

குற்றாலம்

Image
மூலிகைகள் நிறைந்த அருவிகள் தென்காசியில் இருந்து 5 km தொலைவில் உள்ளது நம் குற்றாலம். அழகிய அருவிகளின் அரசி நம் குற்றாலம். இங்கு பல அருவிகள் உள்ளன . திரும்பும் இடமெங்கும் கொட்டும் அருவி சத்தம் காதை இனிமையாக்கும் .  பழைய குற்றால அருவி , மெயின் அருவி, ஐந்தருவி , புலியருவி , சிற்றறுவி , செண்பகாதேவி அருவி , தேனருவி , பழந்தோட்ட அருவி என பல அருவிகள் இங்கு இயற்கையுடன் கொஞ்சி விளையாடும் அழகோ அழகு..... மலை மேல் உள்ள மூலிகை செடிகளை கடந்து வருவதால், இது மூலிகை நிறைந்த அருவியாகக் கொட்டுகிறது. எனவே இதில் குளித்தால் நோய் நொடி இன்றி வாழலாம் . ஆகையால் இது தென்னகத்தின் மூலிகை நிறைந்த அருவி (south indian spa) என அழைக்கப்பெறுகிறது.   தென்காசியை தாண்டும்போதே தென்றல் காற்று நம்மை வரவேற்கும். குற்றாலம் வந்தவுடன் இனிமையான குளிர் காற்றும் , பசுமையான மரங்களும் நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும். தூரத்தில் அருவிகளின் சத்தம் , ஆங்காங்கே மக்கள் கூட்டம், குரங்குகளின் சேட்டைகள் என குதூகல பயணமாக குற்றாலம் அமையும்.  ஒவ்வொரு அருவி பற்றிய பதிவுகளுடன் மேலும் குற்றாலம் பற்றிய தகவல்களை அடுத்...

திருநெல்வேலி அல்வா

Image
திருநெல்வேலி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது அல்வாதான்... முதன்முதலில் இந்த அல்வா ராஜஸ்தான் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த இனிப்புக்கு ராஜ்புத்ராஸ் என அந்த மக்கள் பெயரிட்டு இருந்தனர். சொக்கம்பட்டி ஜமீந்தார் ஒரு வடஇந்திய பயணத்தின் போது இந்த இனிப்பை உண்டு இதன் சுவையில் மயங்கி, இதை செய்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்தார் . அவர் மூலம் நெல்லையில் முதன்முதலில் இந்த இனிப்பு செய்யப்பட்டு அதற்கு அல்வா என பெயரிடப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் தெரு தெருவாக விற்கப்பட்டுவந்த அல்வா , 1882ம் ஆண்டு ஜெகன்சிங் என்பவரால் கடை தொடங்க பட்டு பின் சலிவா என்பவரால் இந்த கடை இருட்டுக்கடை அல்வா என வளர்ச்சி பெற்றது.... தாமிரபரணி தண்ணீரில் செய்யும் நம் அல்வா ருசி மிகுந்து இருப்பதால் உலக அளவில் பெயர் பெற்றுவிட்டது , வெளிநாடுகளுக்கு அல்வா ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ச்சி பெற்றாலும் இன்றும் இந்த கடையில் ஒரே ஒரு குண்டு pulb மட்டுமே எரியும் . கடைக்கு பெயர் பலகை கூட கிடையாது ஆனால் உலக அளவில் famous. அதனாலயே இதை இருட்டுக்கடை என்று அழைக்கிறோம். இந்த அல்வா செய்வதற்கு 3 மணி நேரங்கள் ஆகின்றது ... அனால் சில மண...